தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் இன்று….

0
157

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

இன்று காலை 7 மணி முதல் இன்றிரவு 7 மணி வரை இந்த வாக்குபதிவுகள் இடம்பெறவுள்ளன.

கொவிட் 19 பரவல் காரணமாக கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த வாக்குபதிவுகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சில தொகுதிகளில் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அவ்வாறான தகவலில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை எனவும், திட்டமிட்டப்படி இன்றைய தினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தெரிவித்திருந்தார்.

அதேநேரம், பதற்றமான, வாக்களிப்பு நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here