மலையக சமூகம் என்பது இன்று அரசியலிலும் இலங்கை வாழ் சமூக நீரோட்டத்தில் தவழ்ந்து வரும் ஒரு குழந்தை. இந்த சமூகத்தின் வளர்ச்சி தேசிய நீரோட்டத்தில் ஆரம்பநிலையிலேயே உள்ளது. கடந்த எழுபது வருட அரசியல் என்பது மலையக சமூகத்துடன் ஒன்றி பயணிக்காத சவுமியமூர்த்தி தொண்டமானின் குடும்பம் தலைமை வகிக்கின்றது. தாத்தா, மகன் , பேரன், பூட்டப்பேரன் மற்றும் அவர்களின் உறவினர் என தொடரும் அவலம். தோட்ட தொழிலாளரின் சந்தாப்பணம் அதைவிட அரசியலில் வரும் வருமானம் என்று அவர்களின் பட்டியல் நீள்கின்றது.
மலையக மக்களை தங்களின் ஆளுகைக்குள் வைத்திருக்கும் இவர்கள் இரண்டு நாட்டுக்கு பிரஜைகள். புதுக்கோட்டையில் இவர்களின் பூர்வீக சொத்துக்கள் என தேங்கிக்கிடக்கின்றது. அது அவர்களின் பரம்பரை சொத்தாக இருந்துவிட்டு போகட்டும் அது தொடர்பில் விமர்சனம் தேவையில்லை இங்கே சொல்ல வருவது தொண்டமானின் காலத்தில் இருந்து இவர்கள் தமது தொழிற்சங்க தலைவர்களைக்கூட வா ” போ ” என்றுதான் அழைப்பார்கள் யாருக்கும் மரியாதை அவர்கள் கொடுப்பதில்லை இந்த விடயத்தை யாரும் கண்டுக்கொள்வதுமில்லை இதன் உச்சக்கட்டம் இன்று பபூட்டுப்பேரன் ஜீவன் ஆறுமுகத்திடம் வெளிப்பட்டு இருக்கின்றது.
அவர் மேடையில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலையத்தலங்களில் வெளியாகியுள்ளன. அதாவது தாயை கூ ட்டிக்கொடு” ராஜாங்க அமைச்சராக இருக்கும் ஒருவர் அதைவிட லண்டனில் கற்றவர் என சொல்லப்படும் ஒருவரின் சொல்லாடல் தாயை கூட்டிக்கொடு ” அதாவது தாயை வேறொரு ஆடவனுக்கு விபச்சாரத்துக்கு அனுப்பு என்பதாகும். மலையகத்தின் ஆணிவேராக இருப்பது இந்த தாய்மார்கள் அவர்களை நோக்கி விடுக்கப்பட்டுள்ள இந்த கேவலமான மேடைப்பேச்சு கண்டிக்கத்தக்கதும் கண்டனத்துரியதுமாகும். இதுபோன்ற நாகரீகமற்ற நபர்களை புறந்தள்ள மலையக மக்கள் முன்வரவேண்டும். பாடசாலை செல்லும் சிறு பராயத்தினர் தாயை கூட்டிக்கொடு ” என்ற சொல்லுக்கு நாளை உங்களிடமும் விளக்கம் கேட்கக்கூடும் “? நாகரீகம் அற்ற ஒருவர் உங்களுக்கு தலைவனா என்ற கேள்வியும் எழும்” ஜீவன் ஆறுமுகம் பகிரங்க மன்னிப்பு கோரல் வேண்டும்.
கோவிந்தன்.