ஹட்டன் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலி மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதி!

0
172

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டிக்கு சமீபமாக இன்று (12) பகல் சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் பலியானதாகவும் மற்றுமொரு பெண் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் குபேரன் கருணாகரன் வயது சுமார் 28 மதிக்க தக்கவர் எனவும் இவர் நோர்வூட் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது விக்டன் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் அதே பக்கத்தில் நடந்து குறித்த இளம் குடும்பஸ்த்தர் மீதி மோதியுள்ளது குறித்த நபர் பஸ்ஸில் மோதுண்டு வீதியில் சென்ற பெண் மிது வீழ்ந்து நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் மொதுண்டு மீண்டும் வீதியின் பக்கம் வீழ்ந்ததாகவும் சம்பவத்தில் நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து பஸ் சாரதி பஸ்ஸினை நடு ரோட்டில் விட்டு விட்டு இறங்கி பொலிஸ் நிலையம் நோக்கி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது ஆண் மரண்மடைந்துள்ளதாகவும் மற்றுமொரு பெண் காணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பஸ்ஸினையும் தடுத்து வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here