கினிகத்தேன நகருக்கு வருகைத்தரும் அனைவரும் நடைமுறையில் உள்ள சுகாதார வழிக்காட்டல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுள்ளனர்.
இது தொடர்பில் நகரில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்தனர்.
குறிப்பாக வாகன சாரதிகள் உள்ளிட்டோர் தெளிவுப்படுத்தப்பட்டனர்.
கினிகந்தேன நகரை அண்டிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.