நானுஓயா நகரில் கொவிட் 19 விழிப்புணர்வு செயற்திட்டம்.

0
186

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கமைய நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (30) வெள்ளிக்கிழமை நுவரெலியா பிரதேச சபையும் நுவரெலியா நானுஓயா பொலிஸ் நிலையமும் இணைந்து நானுஓயா நகரில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாக இத்தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளையும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் செயற்திட்டமும் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இச் செயற்திட்டத்தில் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏனைய அதிகாரிகள், நகர வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here