நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா சுகாதார அதிகார பிரிவுக்கு சொந்தமான நோர்வூட் நிவ்வெளி பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் தற்போது இனங்காணப்பட்டு வரும் கொவிட் தொற்றாளர்களின் நிலை காரணமாக இப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 145 தோட்டங்களும் முடக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் இதற்கு முழுப்பொறுப்பினையும் சுகாதார பிரிவினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார். இன்று (09) நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
கடந்த மூன்றாம் திகதி இன்ஜஸ்றி பகுதியில் உள்ள கெலனிவெளி கம்பனிக்கு சொந்தமான தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் காரணமாக இன்று மூன்று தோட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று அந்த தோட்டங்களில் வாழும் மக்களுக்கு அத்தியவசிய தேவைகளை பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என அம் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நோர்வூட் தொழிற்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பறிசோதனையில் ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் வேலை செய்யும் இருவர் மருந்து எடுப்பதற்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பறிசோதனையில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பறிசோதனையில் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 25 பேருக்கு ஆறு பேர் என்றால் இது 24 சதவீதமாகும் ஆகவே இந்த ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 800 மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். ஆகவே இதனை உற்று நோக்கும் போது 100 மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழும்புகின்றது. இது குறித்து எழுத்து மூலம் நுவரெலியா மாவட்ட வைத்திய பணிப்பாளருக்கும் மஸ்கெலியா வைத்திய அதிகாரிக்கும் அறிவித்த போதிலும் அவர்கள் முறையான நடவடிக்கை எதுவும் எடுத்தாக தெரியவில்லை.
இந்நிலையில் தொற்று பரவல் வீதம் அதிகமான இங்கு உள்ள தோட்டங்களை தான் அது பாதிக்கும் இந்த பகுதியில் சுமார் 145 மேற்பட்ட தோட்டங்களிலிருந்து தான் இந்த ஆடைத்தொழிற்சாலைக்கு வருகிறார்கள். ஆகவே இது தோட்டங்களுக்கு பரவினால் தோட்டங்கள் மூட வேண்டிய நிலை ஏற்படும் அதனால் ஒரு லட்சத்திற்கு அதகமான குடும்பங்கள் பாதிப்படைவதுடன் இன்று வெளி நாட்டு வருமானத்தினை ஈட்டித்தரக்கூடிய தேயிலை பொருளாதாரமும் பாதிப்படையும், அத்தோடு இந்த மக்களுக்கு சுகாதார வசதிகள் முதல் அத்தியவசிய தேவைகள் பெற்றுக்கொடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படும். ஆகவே 800 பேருக்கு வசதிகள் வேண்டுமானால் செய்து கொடுக்கலாம் ஆனால் லட்சக்கணக்காணவர்களுக்கு இந்நிலை உருவானால் பாரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
எனவே இது குறித்து சுகாதார பிரிவனர் தான் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். நான் தொழிசாலையினை மூட வேண்டும் என்று கூறவில்லை உடனடியாக பிசிஆர் பறிசோதனைகளை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உணர வேண்டும் என்று தான் கூறுகிறேன். இன்று கூட பிசிஆர் பறிசோதனை செய்ய வேண்டும் என இதில் வேலை செய்பவர்களை அழைத்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சந்திகளில் நிற்கிறார்கள். இதன் மூலம் இன்னும் பலருக்கும் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இதனால் அவர்களின் குடும்பமும் பதிக்கும் எனவே இவை அனைத்திற்கு சுகாதார பிரிவினரே பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்