கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு.

0
87

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் நேற்று (09) அன்டிஜன் பரிசோதனையின் மூலம் ஒன்பது பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து.இன்று முதல் காலை வரையறையின்றி மூடபட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்ததுள்ளனர்.
குறித்த ஆடைத்தொழிற்சாலை இன்று நோர்வூட் பிரதேச சபைத்தலைவரின் ஆலோசனைக்கமைய தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
நோர்வூட் தொழிற்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பறிசோதனையில் ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த தொழிற்சாலையில் வேலை செய்யும் இருவர் மருந்து எடுப்பதற்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பறிசோதனையில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பறிசோதனையில் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நேற்று 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 09 பேர் இனங்காணப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்தே குறித்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தொழிற்சாலைகயில் 22 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் 260 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதனை தொடர்ந்து குறித்த தொழிற்சாலை தொடர்ந்து மூடுவதா இல்லையா முடிவு செய்யப்படவுள்ளதாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே வேளை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருக்கமான உறவை பேணியவர்கள் 200 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here