‘நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்’ எனும் தோனிப்பொருளில் தற்போது தோட்ட பகுதியில் அதிகரித்தது வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி தோட்ட மக்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை ஒன்றினை நோர்வூட் பொலிஸ் நிலையம் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து முன்னெடுத்துள்ளன.
இதற்கமைய இன்று (13) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்வூட் வெச்சார் மானெலு, தியசிரிகம, நிவ்வெளி உள்ளிட்ட தோட்டங்களில் வாழும் மக்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன் கொரோனா தொற்றின் பாரதூரம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் முகக்கவசங்கள் தொற்றி நீக்கிகள் ஆகியன இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது சுகாதார வழிமுறைகளை பேணுவதற்கும் பொது மக்கள்க்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறித்த செயத்திட்டமானது நகரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது தோட்டங்களுக்கு சென்று வீடு வீடாகவும் தேயிலை மலையகளுக்கு சென்று தொழிலாளர்களையும் தெளிவுப்படுத்தப்பட்டனர்.
நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் வி.ஏ.சி,ஆர். பிரேமலால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அனுசரனையினை தொடர்பாடலுக்கான பயிற்சி நிலையம் வழங்கி இருந்தது. சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் உத்தியோகஸ்த்தர்கள், பொலிஸ் பிரஜா கமிட்டி உத்தியோகஸ்த்தர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், 08 அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டிருந்தன.
கே.சுந்தரலிங்கம்