நுவரெலியா டவுன் ஹோல் கட்டிடத்தை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்ற நடவடிக்கை

0
223
நுவரெலியாவில் உள்ள 112 ஆவது படைப் பிரிவு மற்றும் 3 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் கொவிட் நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் அவசர காலத்தின் தேவைக்காக 72 மணி நேரத்திற்குள் நுவரெலியாவில் உள்ள டவுன் ஹோல் கட்டிடத்தை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

இடைநிலை பராமரிப்பு நிலையமானது நுவரெலியா மேயர் மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் நுவரெலியாவில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியின் ஒருங்கிணைப்பில் 500 கொவிட் தொற்றாளர்களை அவசரமாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரும், நுவரெலிய மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியின் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமஹேவா அகியோர்களின் வழிகாட்டுதலின் படி படையினரால் இந்த திட்டத்தை 72 மணி நேரத்திற்குள் செய்து முடிக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படையணிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள், இதற்கு தேவையான படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கின.

இந்த இடைநிலை பராமரிப்பு நிலையமானது கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவு மற்றும் 112 பிரிகேட்டின் தளபதிகளின் ஒருகிணைப்புடன் செயற்பாட்டுக்கு வந்தது.

நுவரெலியவில் உள்ள 3 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் இந்த புதிய இடைநிலை பராமரிப்பு நிலையத்துகு தேவையான அனைத்து மின் மற்றும் வயரிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

டி ,சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here