அட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

0
223

அட்டன் பிரதான தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த தபாலகத்தில் பணி புரிந்த இரண்டு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த இரண்டு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அட்டன் – டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார அதிகாரி ராமய்யா பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 17 அட்டன் தபால் ஊழியர்களை ரெபிட் எண்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை பயணக்காட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அட்டன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here