நாட்டில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தற்போது வரை 5 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் தற்போது இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.