ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, அவரது குடும்பத்தினரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனுக்கும நேற்றைய தினம் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
தற்போது, அவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.