பண்டாரவளை கல்வி வலயத்தின் நான்கு தமிழ் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கல்வி வலயம் அறிவித்துள்ளது.
ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன
இதற்கமைய பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரி, ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி, கலப்பிட்டகந்த இடைநிலை பாடசாலை, பூணாகலை தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய நான்கு தமிழ்ப் பாடசாலைகளே இவ்வாறு தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.