அட்டன் நகரில் பல இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

0
204

அரசாங்கம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று (22) முதல் மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும், தோட்டப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் தடை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், அட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கையை அட்டன் – டிக்கோயா நகரசபையின் தலைவரின் வழிகாட்டலின் கீழ் நகர சபை சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அட்டன் நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.

இதன்படி பஸ் தரிப்பிடம், புகையிரத நிலையம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here