ஹொரண இங்கிரிய றைகம் தோட்ட மேல் பிரிவில் சுமார் 800 பேருக்கு சைனாபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
ஹொரண பிரதேச சபை உறுப்பினர் பொன் சரவணராஜின் தலைமையில் இந்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இங்கிரிய றைகம் மேல் பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று இடம்பெற்றது.
இதன் மூலம் இங்கிரிய றைகம் தோட்ட மேல் பிரிவு மக்கள் கொவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என ஹொரண பிரதேச சபை தமிழ் பிரதிநிதி பொன் சரவணராஜ் தெரிவித்துள்ளார்.
எனினும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வழங்கியுள்ள வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் கேட்டுள்ளார்.