தேசிய கால்நடை பண்ணையில் தொழில் புரியும் 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி.

0
212

நுவரெலியா – டயகம சந்திரிகாமம் தோட்டத்தை அண்மித்துள்ள தேசிய கால்நடை பண்ணையில் தொழில் புரியும் 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அங்கு தொழில் புரியும் 4 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் நெருங்கி பழகிய 70 பேருக்கு பீ.சீ.ஆர் பிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பீ.சீ.ஆர் முடிவுகளுக்கு அமையவே இன்று புதிய தொற்றாளர்கள் 32 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களில் நால்வர் டயகம சந்திரிகாமம் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான அணைவரும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நிலையை கருத்திற்கொண்டு வேறு பண்ணைகளில் தொழில் புரியும் பணியாளர்களை குறித்த பண்ணையில் பணிகளை தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்துள்ளதாக போபத்தலாவ கால்நடை பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here