தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இராசாயன கொள்கலன்கள். அருகில் செல்லவேண்டாம் என எச்சரிக்கை.

0
172

தற்போது கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலின் காரணமாக, கடலில் விழுந்த 3 கொள்கலன்களில் எபோக்ஸி ரெஸின் என்ற இராசாயம் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த இரசாயனம் அடங்கிய கொள்கலன்களுக்கு (கன்டெய்னர்) அருகில் செல்லவேண்டாம் எனவும், குறித்த கொள்கலன்களை கண்டால் காவல்துறையினருக்கோ, கடற்றொழில் காரியாலயத்துக்கோ அறிவிக்குமாறு, குறித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களிடம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரியுள்ளார்.

இந்த கொள்கலன்களில் அடங்கியுள்ள இரசாயனங்கள், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமைகள் ஏற்படுத்தக்கூடியவை என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இன்று காலை மீண்டும் தீ ஏற்பட்டமையினால் அதிலிருந்து 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருந்தன. அத்துடன், தீயனால் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தின் காரணமாக இருவர் காயமடைந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here