மக்களின் இன்றைய செயற்பாடுகள் நல்லதல்ல – இராணுவத்தளபதி எச்சரிக்கை

0
186

இன்றை தினம் பலர் அத்தியாவசியப் பொருட்களைப் கடைகளுக்கு சென்று வாங்குவதற்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது மகிழ்ச்சிப்பட முடியாது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எனவே, எதிர்காலத்தில் கடைகளைத் திறப்பதற்கு பதிலாக, நாங்கள் ஒரு மாற்று நடவடிக்கையை செயற்படுத்த வேண்டியிருக்கு என்றார்.
இதன்படி, மொபைல் சேவை வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றார்.

அருகிலுள்ள கடையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்றும், இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய செயற்பாடுகள் கொரோனாவின் பரவலை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here