ஸ்டாபோட் தோட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட டிரக்டர் விபத்தில் 21 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தோட்ட தொழிலாளர்களின் சங்கத்தின் நுவரெலிய மாவட்ட செயலாளர் வி.புஸ்பானந்தன் மதுரட்ட பெருந்தோட்டக் தோட்ட கம்பெனி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும் தோட்ட நிர்வாகத்தினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்தியசெலவு,போக்குவரத்து செலவு என அனைத்தையும் தோட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டுமென தோட்ட நிர்வாக முகாமையாளரிடம் வழியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்