லிந்துலையில் மரம் விழுந்து வீடு சேதம், இருவர் காயம்.

0
254

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஹன்வத்தை கிராம சேவகர் பகுதியில் ராணிவத்தை தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று நண்பகல் 2.00 மணியளவில் பெரிய ராணிவத்தை தோட்ட குடியிருப்பு ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று வீழ்ந்து வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

மரம் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் ஐவர் இருந்துள்ளனர்.இதில் ஐந்து வயது குழந்தை ஒன்றும் பெண் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்கள் உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் அறிந்து லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்கள் நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை சம்பந்தமாக பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தனர்.

இதன் தோட்ட உதவி முகாமையாளர் , பொலிஸார், பொதுமக்கள் இணைந்து வீட்டின் மீது விழுந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை தற்காலிகமாக தோட்ட துவக்கத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் சம்பந்தமாக அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.பாலேந்திரன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here