இராணிவத்தை தோட்டத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்ததோடு தாயும் மகளும் காயமுற்று லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.இந்நிலையில் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனோடு முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் பழனி சக்திவேல் 28/05/2021 குறித்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்வையிட்டதோடு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக வழங்கப்பட்ட உலர் உணவு பொருட்களையும் வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த், பா.பாலேந்திரன்