குணச்சித்திர நடிகரான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார்.
தமிழ்த் திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா. இவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட திரைப்படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்களுக்கு நெருங்கிய நண்பரும் ஆவார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெங்கட் சுபா நேற்று நள்ளிரவில் காலமானார். இத்தகவலை தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தனது பதிவில் அவர், ‘என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி, நடிகர் வெங்கட் சற்றுமுன் 12.48க்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.