கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட புரட்டொப் மேமலை தோட்டத்தில் கடந்த 18ம் திகதி தோட்டத்தில் சட்ட விரோதமாக விற்கப்படும் மதுபாவனைக்கு எதிராக தோட்ட பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்நிலையில் போராட்டத்தை முன்னின்று நடத்திய தேவதாஸ் திவ்யானந்தன் மீது 29/5/2021 இனந்தெரியாதாரோல் வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது.
இதனால் முழு தோட்டமும் பரபரப்பு அடைந்துள்ளதோடு தோட்ட தொழிலாளர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர். வெட்டப்பட்ட தேவதாஸ் திவ்யானந்தன் வகுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தோட்டத்தில் சந்தேகத்தின் பேரில் ஐவரை புஸல்லாவ பொலிசார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்