கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்து நின்ற முதியோர்.

0
136
தமக்கான முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை அட்டன் பிரதேச முதியோர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள பிரதான தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் நேற்றும் இன்றும் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து முதியோர்கள் தமது மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக தபால் அலுவலகங்களுக்குச் சென்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் ஹட்டன் பிரதான தபால் அலுவலகத்தின் ஊடாக தமக்குரிய மாதாந்த நிவாரண கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்காக முதியோர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலைமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here