அமரர் ஆறுமுகம் தொண்டமானின் 57 வது ஜனன தினத்தை முன்னிட்டு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரையில் வெள்ளவத்தை ஸ்ரீ ஜினானந்த மகா விகாரையில் விசேட வழிபாட்டு
பூஜை நிகழ்வு 29/05/2021 இடம்பெற்றது.
வழிபாட்டின் பின்னர் ஸ்ரீ ஜினானந்த சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் சிறுவர் இல்லத்துக்கு மதிய உணவு உட்பட தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கொழும்பு மாவட்டத்துக்கான இளைஞர் அணி அமைப்பாளர் ரகு இந்திரக்குமார் ஊடாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்