ஹக்கல பகுதியில் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்து.

0
159

நுவரெலியா ஹக்கல பகுதியில் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை (30/05) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் இருந்து வெளிமடையை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு ஹக்கல விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நடந்த இடத்தில் போடப்பட்டிருக்கும் வேக கட்டுப்பாட்டை சாரதி நகர்ந்து செல்ல முயற்ச்சி செய்யத விபத்து ஏற்பட்டுள்ளதா க நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்னர்.

குறித்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்

டி சந்ரு

Update ….

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த கெண்டயினர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் லொறி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு பள்ளத்தில் இருந்த வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.

லொறி விழுந்ததில் வீட்டில் இருந்த எவருக்கும் எந்த வித பாதிப்புகள் ஏற்படாத நிலையில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தொழினுட்ப கோராறு காரணமாகவே லொறி விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பல வீதித்தடைகளை அமைத்துள்ளது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here