கொட்டக்கலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் வெளியின் சென்று பொருட்களை கொள்வனவு செய்யவும் அச்சப்படுகின்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பொதுமக்கள் கொட்டக்கலை வர்த்தக சங்க தலைவரும் மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளருமான புஸ்பா விஸ்வநாதனிடம் அறிவிக்க அதற்கான நடவடிக்கையை இன்றைய தினம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் மக்கள் வீட்டிலிருந்தவாரே அத்தியாவசிய பொருட்களை சதோச உட்பட கொட்டக்கலையில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் ஊடாக வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
0512244340 இவ்விலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் சதோச ஊடாக பொருட்களை வீடுகளுக்கே கொண்டு செல்ல வசதிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் மக்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்