உலகக் கால்பந்து தகுதிகாண் போட்டியில் (3-2) என போராடி தோற்ற இலங்கை.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியொன்றில் இலங்கை கால்பந்தாட்ட அணி போராடி தோல்வியைத் தழுவியது.

2022ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான ஆரம்பச்சுற்று தகுதிகாண் போட்டியொன்றில் இவ்வாறு இலங்கை தோல்வியைத் தழுவியது.

தென் கொரியாவில் நடைபெற்று வரும் போட்டித் தொடரில் இலங்கை லெபனானிடம் தோல்வியடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் லெபனான் அணி மூன்று கோல்களை போட்டதுடன் இலங்கை அணி இரண்டு கோல்களைப் போட்டது.

சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தரப்படுத்தலின் அடிப்படையில் இலங்கை 204ம் இடத்தை வகிப்பதுடன் லெபனான் 92ம் இடத்தை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் இலங்கையின் சார்பில் போடப்பட்ட இரண்டு கோல்களையும் வாசீம் ராசீக் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.