நாட்டில் நேற்று 2,646 கொவிட்-19 தொற்று. அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம்.

0
188

நாட்டில் நேற்று (07) கொவிட்-19 தொற்றுறுதியான 2,646 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 444 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 414 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 252 பேருக்கும் நேற்று (07) தொற்றுறுதியானது.

கண்டியில் 206 பேருக்கும் நேற்று (07) கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது.

குருணாகலில் 91 பேருக்கும், காலியில் 65 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 113 பேருக்கும், கேகாலையில் 58 பேருக்கும், புத்தளத்தில் 56 பேருக்கும், அனுராதபுரத்தில் 83 பேருக்கும், மாத்தறையில் 30 பேருக்கும், பொலன்னறுவையில் 10 பேருக்கும், அம்பாறையில் 25 பேருக்கும், நுவரெலியாவில் 75 பேருக்கும், இரத்தினபுரியில் 392 பேருக்கும் நேற்று (07) தொற்றுறுதியானது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 12 பேருக்கும், பதுளையில் 62 பேருக்கும், மட்டக்களப்பில் 62 பேருக்கும், மொனராகலையில் 59 பேருக்கும், கிளிநொச்சியில் 18 பேருக்கும், முல்லைத்தீவில் 4 பேருக்கும், திருகோணமலையில் 3 பேருக்கும், மாத்தளையில் 54 பேருக்கும், வவுனியாவில் 21 பேருக்கும் மன்னாரில் ஒருவருக்கும் கொவிட் தொற்றுறுதியானதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,978 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here