முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்க கால அவகாசம்.

அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்தது.

எனினும், தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.