தற்போது நாட்டில் அதிகரித்து காணப்படும் பொருட்களின் விலையுயர்வு மலையக மக்களின் கழுத்தை இறுக்கி பிடிப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் அரிசி,தேங்காய்,தேங்காய் எண்ணெய் உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு மலையக மக்களை மேலும் பொருளாதாரத்தில் பின்நோக்கியே செல்ல வைக்கின்றது.
ஆயிரம் ரூபா சம்பளம் கிடைத்தாலும் மிகுதியை சேமிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. காரணம் அந்த அளவிற்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.அரசாங்கம் பெற்ற கடன்களை மக்கள் மேல் திணிக்கவே அரசாங்ம் இப்படியான நிலையை நாட்டில் உருவாக்கியுள்ளது.இதற்கு அரசாங்கத்தின் சரியான திட்டமிடலும்,முகாமைத்துவம் இல்லாமையே காரணம்.
இவ்விலையேற்றத்தால் பெரிதும் பாதிப்படைவது மலையக மக்களே எனவே பொருட்களின் விலையுயர்வை உடனடியாக குறைக்குமாறு வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்