அதிகரித்து வரும் புத்தாண்டு கொத்தணி கொவிட் தொற்றாளர்கள்.

இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 213,396 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் மொத்தமாக 2,735 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 2,716 பேர் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள். ஏனைய 19 பேரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.

சுகாதார அமைச்சின் தகவல்படி நேற்றையதினம் 18,903 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய அறிக்கைகளின் அடிப்படையில், சிறைச்சாலை, திவுலபிட்டிய, பேலியகொடை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணியில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 206,617 ஆகும்.

புத்தாண்டு கொத்தணியில் மாத்திரம் 111,550 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமையில் 31,059 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.