ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவதற்கு பெரும் எண்ணிக்கையானோர் வங்கிகளுக்கு வருகை.

 

பயணத்தடை காரணமாக ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்க இன்றும் (10) நாளை (11) வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதனையடுத்து இன்று மலையகத்தில் உள்ள அரச வங்கிகளில் பெரும் எண்ணிகையிலானோர் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவதற்கு வருகை தந்திருந்தனர்.
இதனால் இலங்கை மற்றும் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டன.

ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்பவர்களுக்காக இன்று இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ஒரு சில பஸ்களும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் கினிகத்தேனை பகுதியில் இன்று கொவிட் 19 தடுப்பூசிகள் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமையினால் அதிகமான வாகனங்களும் மக்கள் நடமாற்றமும் அதிகமாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

கே.சுந்;தரலிங்கம்