மாதத்தில் 8 நாள் மாத்திரமே வேலை- தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்.

கொட்டியாக்கலை கீழ்ப்பிரிவு மற்றும் மத்தியப்பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் கொட்டியாக்கலை தோட்டநிர்வாகத்திற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.அதாவது மாதத்தில் 8 நாள் மாத்திரமே வேலை வழங்குவதாகவும், தமக்கு தொடர்ச்சியாக வேலை வழங்குமாறு கூறி 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் தோட்ட மக்கள் குறிப்பிடுகின்ற போது தோட்ட நிர்வாகம் கிழமைக்கு 2 நாள் அடிப்படையில் மாதத்திற்கு எட்டு நாள் மாத்திரமே வேலை தருகின்றது.

இதனால் பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளோம். அன்றாட வாழ்க்கையை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சமாளித்து வருகின்றோம்.எனவே மலையக தலைவர்கள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கொட்டியாகலை மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இ.தொ.கா தலைவர் தமக்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் வேலை வழங்கியமையினாலேயே இப்போராட்டம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்