சென்ஜோசப் கல்லூரி தேசிய பாடசாலையாக அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதற்கான காரணம் – கேள்வியெழுப்பும் பழைய மாணவர்கள்

கடந்த ஜனவரி மாதம் புதிய தேசிய பாடசாலைகளின் பெயர் பட்டியல் வழங்கப்பட்டது . அதன் போது மத்திய மாகாணத்தினை சேர்ந்த ஹட்டன் வலயத்திற்குட்பட்ட சென்ஜோசப் கல்லூரியின் பெயரும் இணைக்கப்பட்டிருந்தது .

மஸ்கெலியா நகரில் 1940 ம் ஆண்டு ஜீலை 8 ம் திகதி உருவாக்கப்பட்ட இப்பாடசாலை 81 ஆண்டுகளை கடக்கும் தற்சமயத்தில் நாட்டிற்கான பல நற்பிரஜைகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

இப்பாடசாலையில் கல்வி பெற்றவர்கள் நாட்டில் பல பிரதேசங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றிக்கொண்டிருப்பதுடன் , நாடு கடந்தும் பணியாற்றுகின்றனர் .

ஹட்டன் வலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும்

புலமை பரிசில் பரீட்சை ,
க.பொ.த சாதாரண தர பரீட்சை ,
க.பொ.த உயர்தர பரீட்சை ,
வலய மட்ட போட்டிகள் என அனைத்திலும் சிறந்த பெறுபேற்றை பெற்றுதரும் பாடசாலையாக காணப்படுகின்றது .

இவ்வாறான சிறந்த பாடசாலைக்கு தேசிய பாடசாலையாக அன்று அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது .

இம் மாற்றத்திற்கு என்ன காரணம் ? எதனால் அங்கீகாரம் நீக்கப்பட்டது ? மீண்டும் தங்கள் கல்லூரி தேசிய பாடசாலையாக்கப்பட வேண்டும் , என அப்பாடசாலையின் பழைய மாணவர்களும் , பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் , கருத்து கூறுகின்றனர் .

ச.சதீஷ்குமார்