கந்தப்பளையில்  இரசாயண உரம் வழங்குவதில் குழப்பநிலை.

நுவரெலியா கந்தப்பளை கமநல சேவை காரியாலயத்திற்கு உட்பட்ட பிரதேச விவசாயிகளுக்கு இரசாயண உரம் வழங்குவதில் இரண்டாவது தடவையாகவும் குழப்பநிலை (10) காலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உரங்களை விவசாயிகளுக்கு விணியோகிக்க கந்தப்பளை கமநல சேவை காரியாலயம் மாற்று நடவடிக்கை கையாளும் வரை உரம் வழங்குவதை இடைநிறுத்தம் செய்துள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இம்மாதம் முதலாம் திகதி கந்தப்பளை விவசாயிகளுக்கு உரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டபோது முறையற்ற விணியோகம் செய்தமையினால் நகரில் குவிந்த விவசாயிகளை கட்டுப்படுத்த முடியாதிருந்தது. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டி.சந்ரு