நான்கு வயது குழந்தைக்கு பியர் அருந்தக் கொடுத்த இளைஞன்- பின்னர் நடந்த விபரீதம்

நான்கு வயது குழந்தைக்கு பியர் மது அருந்தக் கொடுத்த 25 வயது இளைஞன் பேலியகொட நுக வீதி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

முகநூல் வீடியோ ஒன்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பேலியகொட பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை சட்டத்தின்படி 18 வயதிற்கு கீழ்பட்ட நபர்களுக்கு மதுபானம் கொடுப்பது மற்றும் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சுமார் நான்கு வயதுடைய குழந்தைக்கு மதுபானத்தை குடிக்கக் குடுத்த வீடியோ ஒன்று நேற்றைய தினம் சமூக வலைகளில் பரவலாகி பலரின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது.