நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது…..

நுவரெலியா மாவட்ட மக்களின் சுகாதார நலனை கருத்திற் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, மேன்மை தாங்கிய பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலனியின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பசில் ராஜபக்க்ஷ, நாமல் ராஜபக்க்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்டத்திற்கு முதற்கட்டமாக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொரோனா தடுப்பூசிகளில், இன்றைய தினம் (11) நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிரிமெட்டிய,பெரகும்புர,ஆவாஎலியா, பொரலந்த,பீட்றூ,லவர்ஸ்லீப் ஆகிய பிரதேசங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு டெஸ்போட் தமிழ் வித்தியாலயம், ஆவாஎலியா மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் பீட்றூ தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் குறித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டார். இவருடன் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்கள் மற்றும் பிரஜா சக்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி , நுவரெலியா மாவட்ட செயலாளர் , நுவரெலியா பிரதேச செயலாளர், நுவரெலியா சிரேஸ்ட பொலீஸ் அதிகாரிகள், நுவரெலியா சிரேஷ்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தடுப்பூசிகளை பெற்ற 60 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் ஏற்பாட்டில் தேனீர் விருந்து உபசாரம் வழங்கப்பட்டது.

 

டி சந்ரு