அட்டன் நகர எல்லைக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

அட்டன் நகர எல்லைக்குட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை முன்னெடுக்கப்பட உள்ளது.

நாளை காலை 8.30 மணிமுதல் அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அட்டன் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிப்போர் அட்டன் பொஸ்கோ கல்லூரியிலும் அட்டன் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிப்போர் அட்டன் ஹைலன்ஸ் ஆரம்பப் பிரிவு கட்டிடத்திலும்
அட்டன் தெற்கு, மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிப்போர் டி.கே.டபள்யூ (DKW) கலாசார மண்டபத்திலும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.