நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்கச் செய்தது.
’என்ஜாய் எஞ்சாமி’ பாடல் 3 மாதங்களில் யூ-ட்யூபில் 25 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியாகி 3 மாதங்களை கடந்து, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் தீ. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
காலா படத்தில் ‘உரிமை மீட்போம்’, வட சென்னை படத்தில் ‘மத்திய சிறையிலே’, மாஸ்டர் படத்தில் ‘வாத்தி ரெய்டு’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. இவர்கள் இருவரும் இணைந்துப் பாடிய ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் வெளியானது. நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முணுமுணுக்கச் செய்தது.
இந்தப் பாடலை ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் கொண்டாடி தீர்த்தனர். எஞ்ஜாயி எஞ்சாமி பாடல் வெளியாகி 3 மாதங்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது யூ-ட்யூபில் 25 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.