மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்??

0
143

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையை அடுத்து மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார பொது சேவையாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்த சங்கத்தில் தலைவர் மாலக்க விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான தேவை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவு, மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தனவை தொடர்புகொண்டு வினவியது.

இதற்கு பதில் அளித்த அவர் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்த ஒரு தீர்மானமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here