பயணத்தடையை தளர்த்துவதா? தொடர்வதா?? 20 ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும்

0
214

எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தற்போது அமுலில் உள்ள பயணத்தடை குறித்து வரும் 19 அல்லது 20 ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பயணத்தடை நீக்கம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” 21 ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. ஆனால் அது பற்றி தற்போதே முடிவெடுக்க முடியாது. அனைத்து காரணிகள் பற்றியும் ஆராயவேண்டும். அந்தவகையில் 19 அல்லது 20 ஆம் திகதியளவில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here