எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிறது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
நியாயமற்ற முறையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தமைக்கு எதிராக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதை அடுத்து, அதனை சபாநசாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன் பின்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இது குறித்து கலந்துரையாடி, விவாதத்திற்கான தினத்தை ஒதுக்கிக்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.