கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் நேற்று 500க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
தொற்று உறுதியானவர்களில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹாவில் நேற்றைய தினம் 561 பேருக்கும் கொழும்பு மாவட்டத்தில் 516 பேருக்கும் தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, களுத்துறை, குருணாகல், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் 156 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 93 பேருக்கும், குருணாகலில் 137 பேருக்கும், காலியில் 59 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானது.
யாழ்ப்பாணத்தில் 103 பேரும், கேகாலையில் 40 பேரும், புத்தளத்தில் 121 பேரும், அனுராதபுரத்தில் 38 பேரும், மாத்தறையில் 91 பேரும், பொலன்னறுவையில் 7 பேரும், அம்பாறையில் 35 பேரும், நுவரெலியாவில் 26 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டையில் 40 பேருக்கும், பதுளையில் 13 பேருக்கும், மட்டக்களப்பில் 134 பேருக்கும், மொனராகலையில் 4 பேருக்கும், கிளிநொச்சியில் 15 பேருக்கும், முல்லைத்தீவில் 13 பேருக்கும் தொற்று உறுதியானது.
அதேநேரம் திருகோணமலையில் 24 பேருக்கும், வவுனியாவில் 22 பேருக்கும் மன்னாரில் 3 பேருக்கும் நேற்று தொற்று உறுதியான அதேநேரம் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 17 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 230,691 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 194,145 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தொற்று உறுதியான 34,232 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.