உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.
புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்தது.
இதற்கமைய, 17 போட்டிகளில் 12 இல் வெற்றிப்பெற்று 520 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணியும், 11 போட்டிகளில் 7இல் வெற்றிப்பெற்று 420 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூஸிலாந்து அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி, இன்று பிற்பகல் 3.30க்கு சதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
தோல்வியுறும் அணிக்கு, 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.
போட்டி சமநிலையில் முடிவடைந்தால், மொத்த பரிசுத் தொகை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.
அணி விபரம்
இந்திய அணி – Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli (c), Ajinkya Rahane, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Ravichandran Ashwin, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah.
நியூஸிலாந்து அணி – Devon Conway, Tom Latham, Kane Williamson (c), Ross Taylor, Henry Nicholls, BJ Watling (wk), Colin de Grandhomme, Kyle Jamieson, Tim Southee, Neil Wagner/Ajaz Patel, Trent Boult