பொகவந்தலாவையில் மேலும் 29 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 29 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் தோட்ட பகுதிகளையும் கிராம புறங்களையும் சேர்ந்தவர்கள் என பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி கேர்கஸ்வோல் தோட்டத்தில் 12 பேரும், கொட்டியாகல செப்பல்டன் தோட்டத்தில் 10 பேரும் பொகவந்தலாவ சிறிபுற மற்றும் ஆரியபுற ஆகிய பகுதிகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல் பெட்ரோசா, கெம்பியன், தெரேசியா ஆகிய தோட்டங்களை சேர்ந்தவர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

புதிய தொற்றாளர்கள் 29 பேரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,வட்டவளை பகுதியில் இரண்டு தோட்டங்களைந் சேர்ந்த 11 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

வட்டவளை மவுன்ஜின் தோட்டத்திலும், தியகல தோட்டத்திலும் இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.