பண்டாரவளையில் அடையாளம் தெரியாத நிலை ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பண்டாரவளை, திகனதென்ன பகுதியில் ஆண் ஒருவர் அடையாளம் தெரியாத நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என பண்டாரவளை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.