ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் உலவும் சிறுத்தையொன்று இரவு வேளைகளில் ஹட்டன் காமினிபுற கிராமத்திற்குள் நுழைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இரவு வேளைகளை கடும் அச்சத்துடனேயே கழிக்க வேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய வகை சிறுத்தையொன்று நாய் போன்ற வீட்டு விலங்குகளை தேடி வீட்டு மதில்களுக்குள் பதுங்கியிருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.