2க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து.

0
170

இலங்கை அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேற்று இடம்பெற்ற இரண்டாவது 20க்கு20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வர்த் லூயிஸ் முறையின்படி 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றது.

டக்வர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 18 ஓவர்களில் 103 ஓட்டங்கள் தேவை என நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில் வெற்றியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here