தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே ரஜினிகாந்த் தான்.
அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினி என்று சொன்னதும் முதலில் நினைவிற்கு வருவது அவரது ஹேர் ஸ்டைல் தான். ஆரம்பத்தில் நடிகர் ரஜினி படிய வாரிய முடியுடன் பரட்டை தலையில் தான் இருந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றினார்.
இப்படி ரஜினியின் முடி போனதற்கு காரணம் குறித்து அவருடன் பல படங்களில் மேக்கப் மேனாக பணியாற்றிய சுந்தர மூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் பேசியுள்ள அவர், ரஜினிக்கு முடி கொட்டியதற்கு மூன்று காரணத்தை சொல்லியுள்ளார். அதில், ரஜினிக்கு முடி போனதற்கு காரணம் எப்ப பாத்தாலும் கையை வைத்து தலையை கோதிக் கொண்டே இருப்பார்.
மற்ற நடிகர்கள் ஒரு முறை தலை வாரிவிட்டு விட்டுடுவாங்க, ஆனால், ரஜினி ஷாட்டுக்கு ஷாட் சீப்பை வைத்து வாரிக்கொண்டே இருப்பார். அப்படி செய்தால் அந்த ரூட் என்ன ஆகும். அடுத்தபடியாக அவர் முடி போனதுக்கு காரணம் டை, இந்த டையால் தான் என் முடியே போச்சி என்று அடிக்கடி அவரே சொல்வார். அடுத்தபடியாக சிகிரெட் பழக்கம் அதில் உள்ள நிக்கோட்டின் தான் காரணம்.
இப்போதும் அவருக்கு முடியில் கை போகும். அவர் ஆங்கில படத்தில் நடித்த போது தான் அவரின் ஹேர் ஸ்டைலை மாற்றினார்கள். அவருக்கு அது பிடித்துப்போக அதே ஹேர் ஸ்டைலை பின் தொடர்ந்தார். அதன் பின்னர் தான் அவருக்கு முடி கொட்டவே ஆரம்பித்தது. அதே போல நடிகர் பாட்ஷா படம் முதல் ரஜினி சந்திரமுகி படம் வரைக்கும் பேட்ச் (patch) மட்டும் தான் போட்டுகொண்டு நடித்தார். அந்த படம் வரை அவருக்கு ஒரிஜினல் முடி இருந்தது என்றும் கூறியுள்ளார் சுந்தரமூர்த்தி.
Reason Behind #Rajinikanth Hair Fall…Make Up Man #Sundaramoorthy pic.twitter.com/QtXXPNWLs2
— chettyrajubhai (@chettyrajubhai) June 28, 2021